தமிழகப் பணிகள் - ஓர் பார்வை

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக கடந்த வருடம் நடைபெற்ற சில முக்கிய பணிகள்.


அமைப்பின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பினை ஆற்றிடுவீர்.

எதிர்ப்புப் போராட்டம்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக இணையதள எதிர்ப்புப் போராட்டம் நடபெற உள்ளது. அனைவரும் பங்கு பெறுவீர்.

''தாவா முகாம் '' (MOBILE DAWA BOOTH)

sio திருப்பூர் மாநகரம்  சார்பாக 21-07-13 அன்று காலை முதல் மதியம் வரை

''தாவா முகாம் '' (MOBILE DAWA BOOTH) திருப்பூரின் முக்கிய பகுதியான தினசரி

மார்க்கெட் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இஸ்லாத்தை அறிமுகப் படுத்தும் மடக்கோலைகள் மற்றும் 

கையேடுகள் மாற்று மத நண்பர்களுக்கு வழங்கப்பட்டது.

SIO தமிழகப் பணிகள் ஓர் பார்வை

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) மாணவ சமுதாயத்தின் கல்வி, ஒழுக்க மற்றும் திறமை மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது. அதன் கடந்த ஒரு வருடப் பணிகளின் முக்கிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு.....
மேலும் பல்வேறு பணிகள் செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும். 

STATE PRESIDENT 'S MESSAGE ON RAMADAN


அன்பிற்கினிய சகோதரரே,
                                                            அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ناَللّهُمَّ بَارِكْ لَنَا فِى رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَا
யா அல்லாஹ்!எங்களுக்கு ரஜப் மற்றும் ஷாஃபான் மாதத்தை அருள் நிறைந்ததாக்குவாயாக! மேலும் ரமலான் மாதத்தை அடையக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு அருள்புரிவாயாக ! ஆமீன்.

இறையருளால் இந்த வருடத்தின் ரமலான் மாதத்தை அடைவதற்கான ஓர் சிறந்த வாய்ப்பை வல்ல ரஹ்மான் வழங்கியிருக்கின்றான், அல்ஹம்துலில்லாஹ்!

நன்கு பயிரிட்டு, பாதுகாத்து, பயிற்களை வளர்த்த விவசாயி அறுவடைக்காக அந்தப் பயிர்கள் தயாராகி நிற்கும் போது... அதைப் பார்த்து அந்த விவசாயி எவ்வளவு சந்தோசம் அடைவாரோ, அதைவிட பல மடங்கு சந்தோசத்தை இந்த ரமலான் மாதத்தை அடைவதன் மூலம் நீங்கள் பெறுவீர்கள்  என முழுமையாக நம்புகின்றேன்.

நன்மைகள் அதிகமதிகம் சம்பாதிப்பதற்கும் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குமான ஒரு சிறந்த மாதம்! அதனை எந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்த முடியுமோ. அந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு நிமிடமும் வீணாக செலவழிக்கப்படுவதற்கு நீங்கள் அனுமதிக்காதீர்கள். சுன்னத்தான, நஃபீலான தொழுகைகள், குர்ஆன் ஒதுதல், மனனம் செய்தல், இஃதிகாப், தஹஜ்ஜத், இறைவழியில் செலவழித்தல், இயக்கப்பணிகளில் முழுமையாக ஈடுபடுதல், கல்வி, வேலை என உங்கள் நேரங்களை முறையாக திட்டமிட்டு செலவழியுங்கள். சரியான திட்டமிடுதல் நம்மை நேர்த்தியாக வழிநடத்தும். ஆகவே, ஒவ்வொரு வரும் இப்புனிதமிகு மாதத்தை சரியாக பயன்படுத்துவதற்கான தனிநபர் திட்டத்தை தீட்டினால் நம்மால் அதிகளவு நன்மைகளை சம்பாதிக்க முடியும்.

உடலுக்கும், உள்ளத்திற்குமான மிகச்சிறந்த ஏற்பாடு இந்த ரமளான் மாதம். நோன்பு நமது இறையச்சத்தை அதிகப்படுத்தவே என குர்ஆன் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றது.
﴿يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴾
இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.

மனித வாழ்வில் ஒழுக்க மேம்பாட்டிற்கான ஆணிவேராக இறையச்சம் திகழ்கின்றது. அத்தகைய இறையச்சத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சியினை நாம் இந்த வரும் ரமளானில் பெற்றுவிட முழுமையாக முயற்சிப்போம். நாளை மறுமையில் நோன்பாளிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் ”ரைய்யான்” எனும் சுவன வாசலின் வழியே சென்றிடும் வாய்ப்பினை வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள்பாலிகட்டும் என துஆ செய்கிறேன்.

மேலும் உங்களது இறைஞ்சுதலில் முஸ்லிம் உம்மத்திற்காகவும், இஸ்லாமிய எழுச்சிக்காகவும், இயக்கத் தோழர்களின் இம்மை மறுமை வெற்றிக்காகவும் மற்றும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.

மாற்றம் ஏற்படுத்த நினைக்கும் நம்மிழும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டி இருக்கின்றது. ரமளான் மாதம் அதற்கான ஒரு சிறந்த ஆயுதம். மகத்தான மாற்றம் நம்மில் உருவாகட்டும், இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமின்.
                                                                                                        


இறையன்பில் என்றும்,


M. சையது அபுதாஹிர் M.Sc., M.Phil.,
மாநில தலைவர்-sio,தமிழ் நாடு

உத்தரகான்ட் வெள்ள நிவாரண பணியில் SIO

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) சார்பாக ,உத்தரகான்ட் வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.SIO ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உத்தரகான்டில்  களப்பணியில் உள்ளனர், மேலும் தமிழகம் மற்றும் இந்திய அளவில், வெள்ள நிவாரண நிதி கல்வி வளாகங்களில் மாணவ, இளைஞர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது


கடந்த 5.7.2013 அன்று ,சென்னை ,"புதுக் கல்லூரி (THE NEW COLLEGE) "முன்பு SIO உறுப்பினர்கள்   வெள்ள நிவாரண நிதி சேகரித்தனர் . மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்   நடைபெற்று வருகிறது. 
இப்பணியில் தங்களின் பங்களிப்பும் மிக மிக முக்கியம்.
 நிதி மட்டுமல்ல நீங்களும் தேவை. 
மேலும் தொடர்புக்கு : 87544 22843 

UTTARKHAND FLOOD VICTIMS - NEED OUR HELP

RELIEF fOR UTTaRKhAND  victim

 

 

uttARKhAND FLOOD vicTims need our help

SIO Account
Bank -State Bank of India, Zakir Nagar, New     Delhi.
A/C Name- Students Islamic Organisation of India,
A/C No- 10177185086

IFSC- SBIN0008079,                                                                                                            MICR–110002155,

 
STUDENTS ISLAMIC ORGANISATION OF INDIA

                            TAMIL NADU