மாநிலத்தலைவர் சுற்றுப்பயணம்

SIO தமிழக தலைவர் சகோ.M.நூருல் ஹசன் அவர்கள் தமிழகத்தின் அனைத்து எஸ்.ஐ.ஓ. கிளைகளுக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 29,30 ஆகிய தேதிகளில் எஸ்.ஐ.ஓ. கோவை கிளைக்கு   வருகை புரிந்த மாநிலத்தலைவர் சகோ.M.நூருல் ஹசன் அவர்கள் கோவை கிளையின் அனைத்து உறுப்பினர்களுடனும் தனித்தனியே சந்திப்பு நிகழ்வை மேற்கொண்டார். இதில் ஊழியர்களின் இறையச்சம், தனிப்பட்ட வளர்ச்சி, கல்வி, பொருளாதாரம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டது. தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.  


Read more

SIO மாநில செயலாளர் பாண்டிச்சேரி சுற்றுப்பயணம்

27-10-2011 பாண்டிச்சேரி 
எஸ்.ஐ.ஓ. தமிழக   மண்டல மாநில செயலாளர் சகோ.M.சய்யத் அபுதாகிர் அவர்கள் பாண்டிச்சேரி எஸ்.ஐ.ஓ. கிளைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள SIO மற்றும் ஜமாஅத் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை மேற்கொண்டார்.  மேலும் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் கல்வி பயில்கின்ற வேறு மாநில எஸ்.ஐ.ஓ. ஊழியர்களுடன் சந்திப்பு நிகழ்வை மேற்கொண்டார். 

"இறைநம்பிக்கையும் அதன் வெளிப்பாடும் " மற்றும் முப்பதாம் ஆண்டில் SIO ஆகிய தலைப்புகளில் சிறப்புரைகள் ஆற்றப்பட்டது. சகோ.சையது இப்ராஹிம் மற்றும் சகோ.சாஹித் ஆகியோர் நிகழ்வை திறம்பட வழி நடத்தினர்.