கையெழுத்துப் பிரச்சாரம்

20-03-2012 - சென்னை 
மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  சென்னையில் கையெழுத்துப் பிரச்சாரம் நடைபெற்றது. மாணவ சமூகத்தினிடையே பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அனைத்து மக்களும்  அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மாணவர்களின் இத்தகைய பிரச்சனைக்கு பல்வேறு உளவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) சென்னை மாநகரின் சார்பாக இதனையொட்டி கையெழுத்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



Read more

ஜுனியர் அபிமானிகள் சிறப்பு நிகழ்ச்சி


SIO- நாகை மாவட்டத்தின் சார்பாக  ஜுனியர் அபிமானிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி 26.02.12 அன்று சமரசம் நகர் மஸ்ஜிதே தக்வாவில் நடைபெற்றது. SIO-ன் மாநிலத் தலைவர் சகோ. நூருல் ஹசன் அவர்கள் சிறுவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சிறப்பானதொரு உரையை வழங்கினார் .  ஜீனியர் அபிமானிகளின் மாநில ருங்கிணைப்பாளர் சகோ. தாவூத் அவர்கள்  சிறார்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாக போட்டிகளை நடத்தினார். பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கினார் .


Read more

Tharbiyath Program

மாநில அளவில் ஊழியர்களின் திருக்குர்ஆனுடனான தொடர்பினை அதிகரிக்கச் செய்ய கடைபிடிக்கப்பட்ட திருக்குர்ஆன் வாரம் நாகூர் கிளையிலும் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. இந்த வாரத்தின் ஒரு நிகழ்வாக 26.02.12 அன்று சிறப்பு வாரந்திரக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வு சமரசம் நகரில் உள்ள மஸ்ஜிதே தக்வாவில் நடைபெற்றது. பள்ளி இமாம் சகோ. அஸ்ரப் அவர்களின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.


Read more

Role of Media - Parenting - Education System

கருத்தரங்கம்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழக மண்டலத்தின் சார்பாக 03.03.2012 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலகப் பல்கழைக்கழக சேவை மையத்தில்  கருத்தரங்கு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. மாணவர்களை மேம்படுத்துவதில் பெற்றோர்கள்,ஊடகம், மற்றும்  கல்வித் திட்டத்தின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வு சென்னை மாநகர தலைவர் சகோ.சிராஜுல் ஹசன் அவர்களின் இனிய திருமறை முழக்கத்துடன் ஆரம்பமானது.


Read more