
- This event has passed.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்திப்பு
March 25, 2024

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்தித்தது. அமைச்சரிடம் நாம் சமீபத்தில் கையிலெடுத்த மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
1. ரமலான் பண்டிகைக்கு முந்தைய மற்றும் அடுத்த நாள் உள்ள தேர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும்.
2. 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
3. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் உள்ள இந்துக் காட்டு நாயக்கர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாதது அவர்களின் கல்வியை பாதித்துள்ளது. எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை வேண்டும்.
நமது இந்த மூன்று கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அவரைச் சந்திக்கச் சென்ற குழுவில் எஸ்ஐஓ மாவட்டப் பொறுப்பாளர்கள், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தனர்.