
- This event has passed.
தென் தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணிகள்
December 19, 2023 - February 5, 2024

2023 டிசம்பர் மாதம் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலவரங்களை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்ப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகள் இதில் பயனடைந்தன. அம்மக்களுக்குத் தேவையான உணவுகள், அடிப்படை மருத்துவப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், வியாபாரம் செய்யும் நபர்களுக்குத் தேவையான முக்கிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. பல நல்லுள்ளம் கொண்ட மக்கள் இதற்குத் தேவையான பொருள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தனர்.
சுமார் 2 மாதங்கள் வரை நீண்ட இப்பணிகளில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ), ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (ஜஇஹி), சாலிடாரிடி இளைஞர் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள், ஊழியர்கள், அபிமானிகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.