- This event has passed.
தஸ்கியா பரப்புரை
January 10, 2023 - January 31, 2023
இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(SIO) ஜனவரி 10 முதல் 31 வரை அகில இந்திய அளவில் தஸ்கியா பரப்புரையை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எஸ்ஐஓ தமிழ்நாட்டின் சார்பாக ‘மறுமையின் வாழ்க்கைதான் மிகச் சிறந்ததும், மிக்க நிலையானதுமாகும்.’ (திருக்குர்ஆன் 87:17) எனும் மையக் கருத்தில் தஸ்கியா பரப்புரையை நடத்தி வருகின்றது.
‘மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டவன் வெற்றி பெற்று விட்டான்’ என்று திருமறை எடுத்துரைக்கின்றது. ஆம், தஸ்கியா என்பது முழுவாழ்விலும் உயிரோட்டத்தை ஏற்படுத்தவல்லது. எனவேதான் இஸ்லாமிய இயக்கத்தின் தொடர் நிகழ்வாக தஸ்கியா இருந்து வருகிறது.
இப்பரப்புரையின் இலட்சினையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ வெளியிட்டு தொடங்கி வைத்தார். இப்பரப்புரை மூலம் சமூகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாக இறைவன் அருள்புரிவானாக!