Loading....

Events for May 27, 2023 - March 25, 2024

Students Meet

திருப்பூர்

நாடு தழுவிய கல்வி வளாகப் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் SIO சார்பாக மஸ்ஜிதுல் ஹுதாவில் Students Meet நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வை I.ஆதில்கான் திருமறை வசனங்கள் ஓதித் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் A.S.இப்ராஹிம் தலைமை உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து, முன்னாள் SIO உறுப்பினர் அப்துல் அஹத் சாதியவாதம் குறித்து உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் 'கல்வி வளாகத்தை மாற்றியமைப்போம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். சீறா பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில், […]

பேச்சாளர் பயிற்சி முகாம்

சென்னை

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு சார்பாக 'மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்' சென்னை ஐஐசி அரங்கில் இனிதே நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஊழியர்கள் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மாணவர் ஒன்றுகூடல்: ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து

சென்னை

ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து எஸ்ஐஓ மாநில அலுவலகம் அருகில் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.  

தென் தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணிகள்

தென் தமிழ்நாடு

2023 டிசம்பர் மாதம் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலவரங்களை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்ப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகள் இதில் பயனடைந்தன. அம்மக்களுக்குத் தேவையான உணவுகள், அடிப்படை மருத்துவப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள்,  வியாபாரம் செய்யும் நபர்களுக்குத் தேவையான முக்கிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. பல நல்லுள்ளம் கொண்ட மக்கள் இதற்குத் தேவையான பொருள் […]

மாணவர்கள் ஒன்றுகூடல்: காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி

சென்னைப் பல்கலைக்கழகம்

எஸ்ஐஓ சென்னைப் பல்கலைக்கழகக் கிளைச் சார்பாக பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராகவும், காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் மாணவர்கள் ஒன்றுகூடல் நடைபெற்றது. எஸ்ஐஓ தமிழகப் பொதுச்செயலாளர் ஃபாயிஸ், மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் நிஷாந்த் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இதில் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.  

பொறுப்பாளர்கள் முகாம் 2024

திருச்சி

பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் 2024ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் முகாம் மாநில அளவில் திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்ஐஓ மாவட்ட, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்திப்பு

திருச்சி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்தித்தது. அமைச்சரிடம் நாம் சமீபத்தில் கையிலெடுத்த மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 1. ரமலான் பண்டிகைக்கு முந்தைய மற்றும் அடுத்த நாள் உள்ள தேர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும். 2. 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 3. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் உள்ள இந்துக் காட்டு […]

கருத்தரங்கம்: “பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?”

இணையவழி

எஸ்ஐஓ சார்பாக "பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?" என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் கல்வியாளர் வாஜித் ஷா கருத்துரை நிகழ்த்தினார்.

கருத்தரங்கம்: “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்”

இணையவழி

எஸ்ஐஓ சார்பாக “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஷாஹுல் ஹமீது உமரீ கருத்துரை நிகழ்த்தினார்.

IMAN ENCLAVE: ஜூனியர் SIO அபிமானிகள், பொறுப்பாளர்களுக்கான முகாம்

சென்னை

மாநில அளவில் ʾĪMĀN ENCLAVE எனும் ஜூனியர் SIO அபிமானிகளுக்கான முகாமும், ஜூனியர் SIO பொறுப்பாளர்களுக்கான முகாமும் நடைபெற்றது. இதற்கான பங்கேற்பாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்தனர். நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Back To Top