Loading....

ஜெய்பீம் மற்றும் Free Palestine வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக சென்னை ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் (RGNIYD) மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இடைநீக்கத்தை எஸ்ஐஓ வன்மையாக கண்டிக்கிறது!

மாணவர்கள் “Free Palestine” மற்றும் “ஜெய்பீம்” போன்ற வாசகங்களை எழுதியதாகக் கூறி, எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாமல், அவர்களை “தேச விரோதிகள்” எனப் பெயரிட்டு, இறுதி தேர்வுகளில் பங்கேற்பதிலிருந்து தடைசெய்திருப்பது கல்வி நிறுவனத்தின் ஜனநாயகக் குரல்களை முடக்கும் செயலாகும்.
மாணவர்கள் அந்த செயல்களில் ஈடுபடவில்லை என்று கூறியும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்வாறான நடவடிக்கைகள் மாணவ உரிமைகளையும், கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும் செயலாகும். “Free Palestine” மற்றும் “ஜெய்பீம்” போன்ற வாசகங்கள், எந்தவொரு சட்டத்திலும் அல்லது அரசியலமைப்பிலும் தேசிய விரோதமாகக் கருதப்படுவதில்லை.
எனவே, கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து மாணவர்கள் தங்களது இறுதி தேர்வுகள் எழுதுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

மேலும், கல்வி நிறுவனங்கள் மாணவர் உரிமைகளை மதித்து, ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். மாணவ உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை ஆதரிக்கும் அனைத்து சமூக அமைப்புகளும், இந்த நடவடிக்கையை எதிர்த்து, மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எஸ்ஐஓ வலியுறுத்துகிறது.

Back To Top