Loading....

Author: admin

மாணவர் தேர்தல் அறிக்கை – பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுடன் சந்திப்பு

மாணவர் தேர்தல் அறிக்கை – மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களைச் சந்தித்து SIO வின் மாணவர் தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் பொழுது இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் மாநில செயலாளர் சகோதரர். ரியாஸ் மொய்தீன், சென்னை மாவட்டத் தலைவர் சைஃபுதீன் மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

மாணவர் தேர்தல் அறிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுடன் சந்திப்பு

மாணவர் தேர்தல் அறிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுடன் சந்திப்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறங்காவலருமான திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. SIO மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது எஹியா பாஷா அவர்கள் மாணவர் தேர்தல் அறிக்கையை வழங்கி விளக்கிக் கூறினார்.

இச்சந்திப்பில் SIO மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது ஜாஃபர், கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா, மக்கள் தொடர்பு செயலாளர் ரியாஸ் மொய்தீன், மாநில ஊடக செயலாளர் அஹமத் இப்ராஹிம், அலுவலக செயலாளர் அஃப்சல் ஆகியோர் உடனிருந்தனர்.

மாணவர் தேர்தல் அறிக்கை – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் சந்திப்பு

மாணவர் தேர்தல் அறிக்கை – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் சந்திப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்களான, மதிமுக இலக்கிய அணி மாநிலச் செயலாளர் திரு. காரை செல்வராஜ் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் செல்வன் அவர்களுடனும் சந்திப்பு நடைபெற்றது. SIO மாநிலத் செயலாளர் முஹம்மது ஜாஃபர் அவர்கள் மாணவர் தேர்தல் அறிக்கையை வழங்கி விளக்கிக் கூறினார்.

SIOவின் தேர்தல் அறிக்கையை முழுமையாக கலந்துரையாடி, மிக நேர்த்தியாக நம் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் நம்
கோரிக்கைகளை மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இணைத்து நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வதாக உறுதியளித்தனர்.

இச்சந்திப்பில் SIO மாநில பொறுப்பாளர்களான கல்வி வளாகச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மக்கள் தொடர்பு செயலாளர் ரியாஸ் மொய்தீன், ஊடகச் செயலாளர் அஹமத் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

மாணவர் தேர்தல் அறிக்கை – மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமீமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு

மாணவர் தேர்தல் அறிக்கை – மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமீமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய மு. தமீமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. SIO மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது எஹியா பாஷா அவர்கள் மாணவர் தேர்தல் அறிக்கையை வழங்கி கலந்துரையாடினார்.

“மாணவர் தேர்தல் அறிக்கையை SIO வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரியது. எனது இளம் வயது முதலே நான் பார்த்து வருகின்ற, உத்வேகத்தைத் தரக் கூடிய அமைப்புதான் SIO. இதுப்போன்ற சந்திப்புகள் நமக்கிடையில் அடிக்கடி நிகழ வேண்டும்” என மஜக தலைவர் மரியாதைக்குரிய மு. தமீமுன் அன்சாரி அவர்கள் கூறினார்.

இச்சந்திப்பில் SIO மாநில பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

மாணவர் தேர்தல் அறிக்கை – திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் சந்திப்பு

மாணவர் தேர்தல் அறிக்கை – திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் சந்திப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு – கருத்துக் கேட்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் SIO பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி MP, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் MP, உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கோவி செழியன் MLA, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி MLA, தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி ராஜா MLA, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. KN நேரு MLA, கனிமவளத் துறை அமைச்சர் திரு. ரகுபதி MLA, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் MM அப்துல்லா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் MLA, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திரு. தமிழரசி ரவிக்குமார் MLA, திமுக சுற்றுச் சூழல் அணி செயலாளர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி, மற்றும் கனவு தமிழகம் ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் சம்பந்தம் ஆகியோருக்கு மாணவர் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டு அதன் கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்த்து நிறைவேற்றித் தந்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.

SIO மாநில கல்வி வளாகச் செயலாளர் சகோதரர் ரஹமத்துல்லா மற்றும் SIO திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

மாணவர் தேர்தல் அறிக்கை – 2026 வெளியீடு

மாணவர் தேர்தல் அறிக்கை – 2026 வெளியீடு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான மாணவர் தேர்தல் அறிக்கையை SIO தயார் செய்துள்ளது. கல்வி, மாணவர் மற்றும் சமூக நலன் சார்ந்த பிரச்சனைகளை குறிப்பிட்டு அதற்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாணவர்களின் குரலாக இந்த மாணவர் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர் தேர்தல் அறிக்கையை SIO இன்று தமிழ்நாடு மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது எஹியா பாஷா, மாநிலப் பொதுச் செயலாளர் சகோதரர் முஹம்மது ஜாஃபர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் ஜனாப். I. ஜலாலுதீன், மாநில அமைப்புச் செயலாளர் ஜனாப். K. ஜலாலூதீன் மற்றும் பிற மாநிலப் பொறுப்பாளர்கள் இணைந்து வெளியிட்டனர்.

மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டம்

SIO தமிழ்நாடு சார்பாக மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டம் திருப்பூரில் நவம்பர் 30 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில தலைவர்,மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை எஸ்ஐஓ வன்மையாக கண்டிக்கிறது.

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை எஸ்ஐஓ வன்மையாக கண்டிக்கிறது.

அப்பாவி மக்களின் உயிரைப் பறித்து, பலருக்கும் காயம் ஏற்படுத்திய டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த துயர நேரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் SIO துணை நிற்பதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ, நிதி உதவிகளை உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை பொறுப்புடனும் முன்கூட்டிய முடிவுகள் இல்லாமலும், அனைத்து குடிமக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படுவதாக அமைவது மிக அவசியமாகும்.

இந்த நெருக்கடியான நேரத்தில், குறிப்பாக ஊடகங்கள் எவ்வித பாகுபாடும் அல்லது உணர்ச்சிவசப்பட்ட செய்திகளும் வெளியிடாமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

sio

கல்வி வளாக பயிற்சி பட்டறை முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பாரகத்துஹு

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு மாநில அளவில் இரண்டு நாட்கள் கொண்ட “கல்வி வளாக பயிற்சி பட்டறை முகாம்” வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இம்முகாம் 2025 அக்டோபர் 25 மற்றும் 26 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது. கல்வியின் உண்மையான நோக்கங்கள், இஸ்லாமிய மதிப்புகள் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சி குறித்து ஆழமான உரைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் அகில இந்திய பொது செயலாளர் சகோதரர் அனீஸ் ரஹ்மான் (Adv.) அவர்கள் மற்றும் கல்வி செயலாளர் சகோதரர் ரோஷன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரைகள் வழங்கினர்.

மேலும், பல்வேறு துறைகளிலிருந்து வந்த கல்வியாளர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதலுடன் ஊக்கமூட்டும் உரைகள் வழங்கினர்.

முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு இது ஒரு புதிய சிந்தனை ஊட்டும் மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவமாக அமைந்தது.

இறுதியாக, கல்வியை வழிகாட்டும் ஒளியாகக் கொண்டு சமூக மாற்றத்திற்கு வழிவகுப்போம் என்பதே இம்முகாமின் முக்கிய நோக்கமாக இருந்தது.

SIO National Secretary Meets Trichy MP

The SIO team led by SIO National Secretary, Brother Roshan Moideen, met Trichy MP and MDMK Principal Secretary Mr. Durai Vaiko MP today (25.10.2025). In this meeting, Mr. Durai Vaiko MP was briefed about the Haya Is Life campaign that has spread across the country. It was also urged to raise the voice in Parliament to further strengthen the ethical framework of websites and OTT platforms in India.
In the long conversation, various views were shared, including JIH & SIO history, Islam, contemporary politics and the need for student activities. SIO Tamil Nadu State President Brother. Muhammad yahiya Basha, State General Secretary Br. Muhammad Jafar, District President Br Rahamatulla and other District Leaders were present. less

Back To Top