
- This event has passed.
உறுப்பினர்கள் முகாம் 2024
October 12, 2024 - October 13, 2024

திருச்சியில் அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாநில உறுப்பினர்கள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் E K, எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலக் காப்பாளரும் ஜஇஹி மாநிலத் தலைவருமான மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ, ஜஇஹி மாநிலத் துணைத் தலைவர் I. ஜலாலுதீன், ஜஇஹி மாநிலச் செயலாளர்கள் Dr. ஹஜ் மொய்தீன், அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் கமாலுத்தீன், சாலிடாரிட்டி தஞ்சை மாவட்டத் தலைவர் முஹம்மது ரியாஸ், எஸ்ஐஓ முன்னாள் மாநிலச் செயலாளர்கள் பீர் முஹம்மது, நாகூர் ரியாஸ், எஸ்ஐஓ முன்னாள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் Dr. சலாவுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்வில் எஸ்ஐஓவில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து உறுப்பினர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.