மாணவர்கள் ஒன்றுகூடல்: காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி
சென்னைப் பல்கலைக்கழகம்எஸ்ஐஓ சென்னைப் பல்கலைக்கழகக் கிளைச் சார்பாக பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராகவும், காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் மாணவர்கள் ஒன்றுகூடல் நடைபெற்றது. எஸ்ஐஓ தமிழகப் பொதுச்செயலாளர் ஃபாயிஸ், மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் நிஷாந்த் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இதில் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

