Loading....

Past Events

எஸ்ஐஓ தேசியத் தலைவர் தமிழ்நாடு வருகை

திருப்பத்தூர்

எஸ்ஐஓ தேசியத் தலைவர் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். அதன் ஒரு நிகழ்வாக திருப்பத்தூர், வேலூர் ஊழியர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அதனை அடுத்து வாணியம்பாடியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது. தமிழக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

சுகாதாரத்துறை செயலருடன் எஸ்ஐஓ தமிழக மாநிலக்குழு சந்திப்பு

சென்னை

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலரிடம் எஸ்ஐஓ நேரில் வலியுறுத்தல் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது ஃபாயிஸ் தலைமையிலான குழு தமிழக சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடி அவர்களைச் சந்தித்தது. இச்சந்திப்பின்போது, அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு

ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் கலவரத்தைக் கண்டித்தும், ரயிலில் RPF காவலர் நடத்திய கொடூரக் கொலைகளுக்கு எதிராகவும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

Kite Festival

நாகூரில் நடந்த காற்றாடி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக மொபைல் போனுக்கும் ஆன்லைன் கேமுக்கும் அடிமையாகி உள்ளனர். இந்நிலையில் சிறுவர்களுக்கு வீதி விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் வீடியோ கேம் சமூக வலைத்தளம் டிவி போன்றவற்றின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாகூரில் காற்றாடி திருவிழா நடைபெறும். அந்த வகையில் நான்காவது ஆண்டாக இன்று நாகூர் கடற்கரையில் காற்றாடி திருவிழா நடைபெற்றது. இதில் […]

தமிழகத்துக்கு…

கோயம்புத்தூர்

எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் EK அவர்கள் கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். அதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் மாணவர், இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

கல்வி வளாகப் பொறுப்பாளர்கள் கூட்டம்

சென்னை

SoulSpark: Illuminate Ethics பரப்புரையை முன்னிட்டு சென்னையில் கல்வி வளாகப் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் JIH மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜலாலுதீன், மாநிலச் செயலாளர் ஃபெரோஸ் கான், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் தமிழகத் தலைவர் கமாலுதீன், SIO முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பீர் முஹம்மது, ஊடகவியலாளர் மோகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் நாற்பது மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Students Meet

திருப்பூர்

நாடு தழுவிய கல்வி வளாகப் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் SIO சார்பாக மஸ்ஜிதுல் ஹுதாவில் Students Meet நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வை I.ஆதில்கான் திருமறை வசனங்கள் ஓதித் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் A.S.இப்ராஹிம் தலைமை உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து, முன்னாள் SIO உறுப்பினர் அப்துல் அஹத் சாதியவாதம் குறித்து உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் 'கல்வி வளாகத்தை மாற்றியமைப்போம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். சீறா பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில், […]

பேச்சாளர் பயிற்சி முகாம்

சென்னை

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு சார்பாக 'மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்' சென்னை ஐஐசி அரங்கில் இனிதே நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஊழியர்கள் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மாணவர் ஒன்றுகூடல்: ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து

சென்னை

ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து எஸ்ஐஓ மாநில அலுவலகம் அருகில் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.  

தென் தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணிகள்

தென் தமிழ்நாடு

2023 டிசம்பர் மாதம் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலவரங்களை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்ப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகள் இதில் பயனடைந்தன. அம்மக்களுக்குத் தேவையான உணவுகள், அடிப்படை மருத்துவப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள்,  வியாபாரம் செய்யும் நபர்களுக்குத் தேவையான முக்கிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. பல நல்லுள்ளம் கொண்ட மக்கள் இதற்குத் தேவையான பொருள் […]

Back To Top