Loading....

Past Events

தஸ்கியா பரப்புரை

தமிழ்நாடு

இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(SIO) ஜனவரி 10 முதல் 31 வரை அகில இந்திய அளவில் தஸ்கியா பரப்புரையை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் எஸ்ஐஓ தமிழ்நாட்டின் சார்பாக 'மறுமையின் வாழ்க்கைதான் மிகச் சிறந்ததும், மிக்க நிலையானதுமாகும்.' (திருக்குர்ஆன் 87:17) எனும் மையக் கருத்தில் தஸ்கியா பரப்புரையை நடத்தி வருகின்றது. 'மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டவன் வெற்றி பெற்று விட்டான்' என்று திருமறை எடுத்துரைக்கின்றது. ஆம், தஸ்கியா என்பது முழுவாழ்விலும் உயிரோட்டத்தை ஏற்படுத்தவல்லது. எனவேதான் இஸ்லாமிய இயக்கத்தின் தொடர் […]

பொறுப்பாளர்கள் முகாம் 2023

திருச்சி

திருச்சி இனாம்குலத்தூரில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெற்றது. எஸ்ஐஓவின் மாவட்ட/ கிளை தலைவர்களும் செயலாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் தேசியச் செயலாளர் அனீஸ் ரஹ்மான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

JIH 75ஆவது ஆண்டு நிறைவுப் பரப்புரையில் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் உரை

தூத்துக்குடி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 75ஆவது ஆண்டு நிறைவுப் பரப்புரையை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் உரை நிகழ்த்தினார்.

கருத்தரங்கு: “Maqasid Methodology: A Vision for Renewal”

இணையவழி

எஸ்ஐஓ தமிழ்நாடு மற்றும் மகாஸித் நிறுவனம், கனடா இணைந்து நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் திருச்சி அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அறிஞர் ஜாஸிர் அவ்தா (தலைவர், மகாஸித் நிறுவனம்) "Maqasid Methodology: A Vision for Renewal" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். கருத்தரங்கின் சுருக்கத்தை  எழுத்து வடிவில் காண சமரசம்

கருத்தரங்கு: “பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”

நாகூர்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) ஏற்பாடு செய்த "பாடநூல்களில் வெறுப்பு அரசியல்" கருத்தரங்கில் கல்வியாளர், எழுத்தாளர் மு.சிவகுருநாதன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான், கல்விச் செயலாளர் சையது சைஃபுத்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சனாதனத்துக்கு ஆதரவான, முஸ்லிம் வெறுப்புக் கருத்துகள் தமிழக பாடப் புத்தகங்களில் மலிந்துக் கிடப்பது நிகழ்வில் விவரிக்கப்பட்டது. கருத்துரையை எழுத்து வடிவில் காண sagodharan.in 

மாணவர்களுக்கான இஃப்தார் விருந்து

சென்னை

சென்னையில் எஸ்ஐஓ மாநிலத் தலைமையகம் ஏற்பாடு செய்த "மாணவர் இஃப்தார்" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் மெளலவி ஹனீஃபா மன்பயீ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத் தலைவர் Dr. KVS ஹபீப் முஹம்மது சிறப்புரையாற்றினார். கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.  

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு

சென்னை

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. சமகால சமூக நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. சந்திப்பின்போது, சட்டவியல் தொடர்பாக White dot பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும், நபிகளார் குறித்த பேரா. ஜவாஹிருல்லாவின் நூலும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

Back To Top