Loading....

Past Events

மத நல்லிணக்க மீலாது விழா

திருச்சி

எஸ்ஐஓ திருச்சி மாவட்டம் சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர் அ. மார்க்ஸ், சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி.எஸ். முஹம்மது அமீன், அருட்தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சகோதர சமுதாயத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கலந்துகொண்ட நபர்களுக்கு எஸ்ஐஓ, சத்தியசோலை சார்பாக புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கடையநல்லூர், விருதுநகர்

கடையநல்லூர், விருதுநகர்

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கடையநல்லூர் மற்றும் விருதுநகரில் ஊழியர்களுக்கான கூட்டமும், JIH பொறுப்பாளர்களுடன் சந்திப்பும் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது தெளஃபீக், முஹம்மது சாதிக் அலி ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். கடையநல்லூர் விருதுநகர்

உறுப்பினர்கள் முகாம் 2024

திருச்சி

திருச்சியில் அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாநில உறுப்பினர்கள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் E K, எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலக் காப்பாளரும் ஜஇஹி மாநிலத் தலைவருமான மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ, ஜஇஹி மாநிலத் துணைத் தலைவர் I. ஜலாலுதீன், ஜஇஹி மாநிலச் செயலாளர்கள் Dr. ஹஜ் மொய்தீன், அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் கமாலுத்தீன், […]

பொங்கல் விழாவில் மாநிலத் தலைவர் சிறப்புரை

திருவள்ளூர்

Good Word Public பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எஸ்ஐஓ தமிழ்நாடு மாநில தலைவர் முஹம்மது எஹியா பாஷா அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.  

பொறுப்பாளர்கள் முகாம் 2025

கோயம்புத்தூர்

பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் 2025ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் முகாம் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓவின் அகில இந்தியத் தலைவர் அப்துல் ஹஃபீஸ், ஜஇஹி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஹனீபா மன்பஈ, சாலிடாரிடி மாநிலத் தலைவர் கமாலுதீன், எஸ்ஐஓ முன்னாள் மாநிலத் தலைவர்கள் நூருல் ஹசன், சிக்கந்தர், எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்ஐஓ மாவட்ட, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து

திருச்சி

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய கல்வி நிதி 2152 கோடியை விடுவிக்க வலியுறுத்தியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவப் பேச்சைக் கண்டித்தும் திருச்சி, பாலக்கரையில் எஸ்ஐஓ திருச்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் முஹம்மது ஜாபர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.  

வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்  @ கோயம்புத்தூர், 04 ஏப்ரல், 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட மசோதாவை கண்டித்து எஸ்ஐஓ கோவையின் சார்பாக கரும்புக்கடையில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ முன்னாள் மாநில தலைவர் சகோதரர் சிக்கந்தர் பாட்சா அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.     சாலை மறியல் போராட்டம்  @ திருச்சி, 05 ஏப்ரல், 2025 எஸ்ஐஓ திருச்சி சார்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து பாலக்கரையில் […]

ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் பயிற்சி பட்டறை

சென்னை

எஸ்ஐஓ  தமிழ்நாடு மாநிலம் சார்பாக சென்னையில் ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை 27, ஏப்ரல் அன்று நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ தமிழ்நாட்டின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டனர்.  

கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

10,+1 & +2 முடித்த மாணவ - மாணவியருக்கு அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி துறைசார் நிபுணரைக் கொண்டு நடைபெற இருக்கின்றது. இதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றோம். நாள் : 04.06.2025 (ஞாயிற்றுக்கிழமை) இடம் : நூருல் ஹுதா பள்ளிவாசல், ஆழ்வார்த்தோப்பு, திருச்சி. தொடர்புக்கு : 82703 40296, 97502 71400

Back To Top