Loading....

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருடன் SIO & சாலிடாரிட்டி பொறுப்பாளர்கள் சந்திப்பு.

சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு கல்வி உதவித் தொகைகளை பாஜக அரசு நிறுத்தியுள்ளது. அந்தக் கல்வி உதவித்தொகைகளை மீண்டும் வழங்கிட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வலியுறுத்தி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ MP அவர்களை சந்தித்து SIO மற்றும் சாலிடாரிட்டி பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இச்சந்திப்பில் SIO திருச்சி மாவட்டச் செயலாளர் சகோ. ஷரிஃப் அஹமது ,சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் ஜனாப். ரியாஸ் மற்றும் SIO மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தனர்.

Back To Top