Loading....

மாணவர் தேர்தல் அறிக்கை – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் சந்திப்பு

மாணவர் தேர்தல் அறிக்கை – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் சந்திப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்களான, மதிமுக இலக்கிய அணி மாநிலச் செயலாளர் திரு. காரை செல்வராஜ் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் செல்வன் அவர்களுடனும் சந்திப்பு நடைபெற்றது. SIO மாநிலத் செயலாளர் முஹம்மது ஜாஃபர் அவர்கள் மாணவர் தேர்தல் அறிக்கையை வழங்கி விளக்கிக் கூறினார்.

SIOவின் தேர்தல் அறிக்கையை முழுமையாக கலந்துரையாடி, மிக நேர்த்தியாக நம் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் நம்
கோரிக்கைகளை மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இணைத்து நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வதாக உறுதியளித்தனர்.

இச்சந்திப்பில் SIO மாநில பொறுப்பாளர்களான கல்வி வளாகச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மக்கள் தொடர்பு செயலாளர் ரியாஸ் மொய்தீன், ஊடகச் செயலாளர் அஹமத் இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

Back To Top