Loading....

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை எஸ்ஐஓ வன்மையாக கண்டிக்கிறது.

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை எஸ்ஐஓ வன்மையாக கண்டிக்கிறது.

அப்பாவி மக்களின் உயிரைப் பறித்து, பலருக்கும் காயம் ஏற்படுத்திய டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த துயர நேரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் SIO துணை நிற்பதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ, நிதி உதவிகளை உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை பொறுப்புடனும் முன்கூட்டிய முடிவுகள் இல்லாமலும், அனைத்து குடிமக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படுவதாக அமைவது மிக அவசியமாகும்.

இந்த நெருக்கடியான நேரத்தில், குறிப்பாக ஊடகங்கள் எவ்வித பாகுபாடும் அல்லது உணர்ச்சிவசப்பட்ட செய்திகளும் வெளியிடாமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

sio

Back To Top