மாணவர் தேர்தல் அறிக்கை – மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமீமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய மு. தமீமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. SIO மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது எஹியா பாஷா அவர்கள் மாணவர் தேர்தல் அறிக்கையை வழங்கி கலந்துரையாடினார்.
“மாணவர் தேர்தல் அறிக்கையை SIO வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரியது. எனது இளம் வயது முதலே நான் பார்த்து வருகின்ற, உத்வேகத்தைத் தரக் கூடிய அமைப்புதான் SIO. இதுப்போன்ற சந்திப்புகள் நமக்கிடையில் அடிக்கடி நிகழ வேண்டும்” என மஜக தலைவர் மரியாதைக்குரிய மு. தமீமுன் அன்சாரி அவர்கள் கூறினார்.
இச்சந்திப்பில் SIO மாநில பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


