Loading....

Events for April 27 - July 21, 2024

தேசிய கல்வி வளாகச் செயலாளரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம்

திருச்சி, சென்னை

எஸ்ஐஓவின் தேசிய கல்வி வளாகச் செயலாளர் இம்ரான் ஹுசைன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள கல்வி வளாகங்களில் எஸ்ஐஓ உறுப்பினர்களுடன் சந்திப்பு, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, இஃப்தார் மற்றும் ஊழியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கோவை

கோயம்புத்தூர்

எஸ்ஐஓ மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர்களின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் அங்கமாக இரண்டு நாட்கள் கோவை சென்றனர். அங்கு எஸ்ஐஓ ஊழியர் கூட்டம், மாவட்ட ஆலோசனைக் குழு சந்திப்பு, ஜஇஹி பொறுப்பாளர்களுடன் சந்திப்பு, மாணவர்கள் சந்திப்பு ஆகியவை நடைபெற்றன.

அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் இலச்சினை வெளியீடு

கோயம்புத்தூர்

அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் என்ற எஸ்ஐஓவின் தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தமிழகத்தில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது. பரப்புரைக்கான இலச்சினை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜஇஹி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, மதுரை, கயத்தாறு

மதுரை, கயத்தாறு

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக மதுரை மற்றும் கயத்தாறு ஊழியர்களுக்கான கூட்டம் இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1) நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் அப்துல் கஃபூர், முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். மதுரை கயத்தாறு

மத நல்லிணக்க மீலாது விழா

திருச்சி

எஸ்ஐஓ திருச்சி மாவட்டம் சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர் அ. மார்க்ஸ், சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி.எஸ். முஹம்மது அமீன், அருட்தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சகோதர சமுதாயத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கலந்துகொண்ட நபர்களுக்கு எஸ்ஐஓ, சத்தியசோலை சார்பாக புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கடையநல்லூர், விருதுநகர்

கடையநல்லூர், விருதுநகர்

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கடையநல்லூர் மற்றும் விருதுநகரில் ஊழியர்களுக்கான கூட்டமும், JIH பொறுப்பாளர்களுடன் சந்திப்பும் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது தெளஃபீக், முஹம்மது சாதிக் அலி ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். கடையநல்லூர் விருதுநகர்

உறுப்பினர்கள் முகாம் 2024

திருச்சி

திருச்சியில் அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாநில உறுப்பினர்கள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் E K, எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலக் காப்பாளரும் ஜஇஹி மாநிலத் தலைவருமான மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ, ஜஇஹி மாநிலத் துணைத் தலைவர் I. ஜலாலுதீன், ஜஇஹி மாநிலச் செயலாளர்கள் Dr. ஹஜ் மொய்தீன், அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் கமாலுத்தீன், […]

பொங்கல் விழாவில் மாநிலத் தலைவர் சிறப்புரை

திருவள்ளூர்

Good Word Public பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எஸ்ஐஓ தமிழ்நாடு மாநில தலைவர் முஹம்மது எஹியா பாஷா அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.  

பொறுப்பாளர்கள் முகாம் 2025

கோயம்புத்தூர்

பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் 2025ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் முகாம் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓவின் அகில இந்தியத் தலைவர் அப்துல் ஹஃபீஸ், ஜஇஹி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஹனீபா மன்பஈ, சாலிடாரிடி மாநிலத் தலைவர் கமாலுதீன், எஸ்ஐஓ முன்னாள் மாநிலத் தலைவர்கள் நூருல் ஹசன், சிக்கந்தர், எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்ஐஓ மாவட்ட, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து

திருச்சி

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய கல்வி நிதி 2152 கோடியை விடுவிக்க வலியுறுத்தியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவப் பேச்சைக் கண்டித்தும் திருச்சி, பாலக்கரையில் எஸ்ஐஓ திருச்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் முஹம்மது ஜாபர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.  

Back To Top